தனிப்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்ற கொலை

தனிப்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்ற கொலை

மாரவில, கட்டுனேரிய புனித அந்தோணி மாவத்தை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (02) மாலை இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் கட்டுனேரிய பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவராவார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தக் கொலை தொடர்பில் 24 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )