கொவிட் பரவலை எதிர்கொள்ள அரசாங்கம் தயாரா?

கொவிட் பரவலை எதிர்கொள்ள அரசாங்கம் தயாரா?

இலங்கையில் டெங்கு, சிக்குன்குன்யா, இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொவிட் ஆகியவற்றின் அபாயங்கள் குறித்து சுகாதாரப் பிரிவு தீவிரமாக கவனம் செலுத்தி, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளின் ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகளை ஆய்வு செய்ததில், இந்த ஆண்டு மே மாதத்தில் மட்டும் கொவிட் நோயாளிகள் பதிவாகும் வீதம் 7.7% ஆக உயர்ந்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

ஆசியாவெங்கும் கொவிட் மீண்டும் பரவி வரும் பின்னணியில், இலங்கையிலும் இந்த வைரஸ் வகை கண்டறியப்பட்டதாக சமீபத்தில் வெளிப்படுத்தப்பட்டது.

இருப்பினும், இதற்கு நாட்டில் உரிய தயார்ப்படுத்தல் இல்லை என சில தரப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

எவ்வாறாயினும், இலங்கையின் சுகாதாரப் பிரிவு, கொவிட் பரவலுக்கு ஏற்றவாறு பதிலளிக்க தேவையான நடவடிக்கைகளை ஏற்கனவே எடுத்துள்ளதாக வலியுறுத்தியுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )