மருத்துவ ஆய்வகம் ஒன்றுக்கு 500,000 ரூபாய் அபராதம்

மருத்துவ ஆய்வகம் ஒன்றுக்கு 500,000 ரூபாய் அபராதம்

முழு இரத்த எண்ணிக்கை பரிசோதனை அறிக்கைக்கு அதிக கட்டணம் வசூலித்த மல்வானை பகுதியில் உள்ள மருத்துவ ஆய்வகம் ஒன்றுக்கு 500,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட மருத்துவ ஆய்வகம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து அபராதம் விதிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்த அபராதம் மஹர நீதவான் நீதிமன்றத்தால் நேற்று (02) விதிக்கப்பட்டது.

முழுமையான இரத்த எண்ணிக்கை பரிசோதனை அறிக்கைக்கு நுகர்வோர் விவகார அதிகாரசபையால் விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச கட்டணம் 400 ரூபாய் ஆகும்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )