
Pyramid Wilmar முன்னேற்றகரமான பங்காண்மைகளின் 20 வருட பூர்த்தியை கொண்டாடுகிறது
இலங்கையின் உணவு தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் துறையில் முன்னோடியான மற்றும் செல்வாக்குச் செலுத்தும் நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் Pyramid Wilmar, இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்து 20 வருட பூர்த்தியைக் குறிக்கும் வகையில் ‘ChefsHunt’ நிகழ்ச்சித் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. Pyramid Oil Mills, மற்றும் சிங்கப்பூரை தலைமையகமாகக் கொண்ட Wilmar International Limited ஆகியவற்றுக்கிடையிலான இணைந்த நிறுவனமாக, 2005 ஆம் ஆண்டில் Pyramid Wilmar (Pvt) Ltd., நிறுவப்பட்டது. ஆசியாவின் முன்னணி விவசாய-வியாபார குழுமமாக Wilmar திகழ்வதுடன், 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் 1000 க்கும் அதிகமான உற்பத்தி ஆலைகளைக் கொண்டுள்ளது. பாம் மற்றும் லோரிக் எண்ணெய் வகைகளை பதப்படுத்தல் மற்றும் விற்பனைப் பொருட்கள் விநியோகத்தில் சர்வதேச முன்னோடியாக அமைந்துள்ளதுடன், மா மற்றும் அரிசி அரைக்கும் ஆலைச் செயற்பாடுகளிலும் சந்தை முன்னோடியாகத் திகழ்கிறது. உலகின் சிறந்த 10 பதனிடாத சீனி உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
நிகழ்ச்சித்திட்டம் நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், 25 உணவு தயாரிப்பு ஆர்வலர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்படும். அதனூடாக அவர்களுக்கு இலங்கை M W institute of Culinary Arts இல் NVQ நிலை 4 சான்றிதழ் கற்கையை தொடர்வதற்கான தகைமை வழங்கப்படும். இந்த கற்கை பற்றிய தகவல்களை +94 770500500 எனும் ஹொட்லைன் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
Pyramid Wilmar இன் முகாமைத்துவப் பணிப்பாளர் சஜாத் மவ்சூன் கருத்தத் தெரிவிக்கையில், “மூலோபாய பங்காண்மைகளினூடாக Pyramid Wilmar பரந்தளவு வியாபார பிரிவுகளை எய்தியுள்ளதுடன், இலங்கையின் உணவுத் துறையில் தலைமைத்துவத்தை எய்துவதற்கு வழிகோலியுள்ளது. இரண்டு தசாப்த காலமாக, இலங்கையுடன் இணைந்து நாம் பயணித்துள்ளதுடன், அதன் பொருளாதாரத்துக்கு பங்களிப்பு வழங்குவதுடன், அதன் வளங்களை மேம்படுத்தி, மக்களுக்கு வலுவூட்டும் பணிகளை மேற்கொண்டுள்ளது. இது வியாபாரம் என்பதை பற்றியது மட்டுமன்றி, ஒவ்வொரு இலங்கையருக்கும் சிறந்த, பிரகாசமான எதிர்காலத்தை கட்டியெழுப்புவதைப் பற்றியதாக அமைந்துள்ளது. முன்னணி உணவு உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் நிறுவனம் எனும் வகையில், முன்னேற்றகரமான பங்காண்மைகள் மற்றும் எமது புத்தாக்கம், சிறப்புக்கான அர்ப்பணிப்புடன் Pyramid Wilmar தொடர்ச்சியான தரத்தை உறுதி செய்வதில் கவனம் செலுத்துகிறது. அதனூடாக எமது நாட்டிலும், புவியிலும் மேற்கொள்ளும் தாக்கத்தை மேம்படுத்தி, எதிர்கால தலைமுறையினருக்கு அனுகூலமளிக்கும் வகையில் அதன் புதுப்பிப்புக்கு ஆதரவளிக்கிறோம். இலங்கையின் முன்னேற்றத்துக்காகவும், பொருளாதார அபிவிருத்திக்காகவும் நாம் எம்மை அர்ப்பணித்துள்ளதுடன், எதிர்வரும் ஆண்டுகளில் எமது வியாபார பிரிவுகளை விரிவாக்கம் செய்யவும் எதிர்பார்க்கிறோம்.” என்றார்.
Pyramid Wilmar இன் பணிப்பாளர்/பிரதம செயற்பாட்டு அதிகாரி தன்வீர் சித்தீக் கருத்துத் தெரிவிக்கையில், “பெருந்தோட்டங்கள், பதப்படுத்தல் முதல் சரக்கு கையாளல் வரையில், அனைத்து இலங்கையர்களின் வாழ்வுக்கும் வளமூட்டும் வகையில் விநியோக சங்கிலியின் ஒவ்வொரு படிமுறையின் செயற்பாடுகளையும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறோம். முறையாக ஒன்றிணைக்கப்பட்ட விநியோகத் தொடர் மற்றும் மூலோபாய ரீதியிலான முதலீடுகளினூடாக நிறுவனம் உள்நாட்டு உணவுத் துறையை மாற்றியமைத்துள்ளது. எமது பயணத்தின் உள்ளக அங்கமாக அமைந்துள்ள பரந்தளவு பங்காளர்களுடனான முன்னேற்றகரமான பங்காண்மையில் 20 வருடப் பூர்த்தியை கொண்டாடுவதையிட்டு நாம் பெருமை கொள்கிறோம். எமது வெற்றிகரமான செயற்பாட்டில் Pyramid Wilmar குழுமம் பணிக்கமர்த்தியுள்ள நேரடி மற்றும் மறைமுக ஊழியர்களின் பங்களிப்பும் முக்கிய பங்காற்றியுள்ளது. நிலைபேறான வளர்ச்சி மற்றும் தரத்தை முன்னெடுத்துச் செல்வது என்பது Pyramid Wilmar Group இன் உயிரோட்டமாக அமைந்துள்ளது.” என்றார்.
சித்தீக் மேலும் தெரிவிக்கையில், “எமது பிரதான தயாரிப்புகள் ஐம்பது வருடங்களுக்கு மேலான கீர்த்தி நாமத்தைக் கொண்டுள்ளன. புகழ்பெற்ற பேக்கரி கொழுப்பு வகைகள், விசேடத்துவமான கொழுப்புகள் மற்றும் மாஜரீன் வகைகள் போன்றன இலங்கையின் உணவு உற்பத்தித் துறையின் உயர் நியமங்களை பூர்த்தி செய்யும் வகையில் தயாரிக்கப்படுகின்றன. அவற்றுடன், அதிகம் விரும்பப்படும் எமது வர்த்தக நாமங்களில் Fortune Cooking Oils, Soya, Basmati Rice, Icing Sugar, Vegetable Fat, MeadowLea Fat Spread மற்றும் Fondré Premium Fat Spread போன்றவற்றில் தொடர்ந்தும் நாடு முழுவதையும் சேர்ந்த நுகர்வோரின் நம்பிக்கை காணப்படுகிறது. அவுஸ்திரேலியாவுக்கு அப்பால், MeadowLea தயாரிப்பை உற்பத்தி செய்யும் ஒரே நாடு எனும் நிலையை இலங்கை தன்வசம் கொண்டுள்ளது. அதனூடாக உள்நாட்டு சந்தைக்கான தரம் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றுக்கான எமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது.” என்றார்.
இலங்கையின் நுகர்வோருக்காக Pyramid Wilmar இனால் சர்வதேச மற்றும் உள்நாட்டு தர நியமங்களுக்கமைய தயாரிப்புகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றில் GMP; HACCP; FSSC 22000; ISO 22000; HAC; ISO 14001; ISO 45001; ASI மற்றும் ISO 9001 தர நியமங்கள் அடங்கியுள்ளன.
மவ்சூன் இறுதியாகக் குறிப்பிடுகையில், “Pyramid Wilmar இல் எமது உறவுகளை மேலும் வலிமைப்படுத்துவதற்கும், புதிய பங்காண்மைகளை கட்டியெழுப்பவும், எதிர்வரும் தசாப்தங்களில் இலங்கையின் பொருளாதாரத்துக்கு எமது பங்களிப்பை அதிகரிக்கச் செய்வதற்கும் எதிர்பார்க்கிறோம்.” என்றார்.