இன்றும் தொழிற்சங்க நடவடிக்கையில் நிறைவுகாண் தொழில் மருத்துவ வல்லுநர்கள்!

இன்றும் தொழிற்சங்க நடவடிக்கையில் நிறைவுகாண் தொழில் மருத்துவ வல்லுநர்கள்!

தங்களது பிரச்சினைகளுக்கு சுகாதார அமைச்சு தீர்வுகளை வழங்காததால், இன்று (05) நாடு முழுவதும் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக நிறைவுகாண் தொழில் மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 8.00 மணி முதல் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் ஒன்றியத்தின் செயலாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.

இருப்பினும், புற்றுநோய் வைத்தியசாலை, மகப்பேறு மற்றும் சிறுவர் வைத்தியசாலை, சிறுநீரக வைத்தியசாலை மற்றும் மத்திய இரத்த வங்கி உள்ளிட்டவை இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடவில்லை என்று கூறப்படுகிறது.

பதவி உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி துணை மருத்துவ சேவையின் நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் சமீபத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர், இதன் காரணமாக நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )