மீரிகமவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி

மீரிகமவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி

மீரிகம – கிரிஉல்ல வீதியில் மீரிகம பழைய பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மீரிகமவில் இருந்து கிரிஉல்ல பக்கம் பயணித்த லொறியொன்று மோட்டார் சைக்கிள் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் கனேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே உயிரிழந்தார்.

சடலம் மீரிகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )