இடைக்கால கணக்கறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி விபரம்

இடைக்கால கணக்கறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி விபரம்

2025 ஆம் ஆண்டின் முதல் 04 மாதங்களுக்கு முன்வைக்கப்பட்ட இடைக்கால கணக்கறிக்கையில், அரசாங்க அலுவல்களை நடத்துவதற்கும் ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டங்களைத் தொடர்வதற்கும் ஒதுக்கப்பட்ட தொகை 1,402 பில்லியன் ரூபாவை அண்மித்துள்ளது.

அதன்படி, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சுக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அந்த தொகை 220.06 பில்லியன் ரூபாவாகும்.

நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு 186.02 பில்லியன் ரூபாவும், பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு 170.47 பில்லியன் ரூபாவும், சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கு 161.99 பில்லியன் ரூபாவும், பாதுகாப்பு அமைச்சுக்கு 142.95 பில்லியன் ரூபாவும் இடைக்கால கணக்கறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை 92 பில்லியன் ரூபாவாகவும் விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை 67.36 பில்லியன் ரூபாவாகும்.

 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )