இந்தோனேசியாவிற்கு வரிச் சலுகையை வழங்கிய டிரம்ப்!

இந்தோனேசியாவிற்கு வரிச் சலுகையை வழங்கிய டிரம்ப்!

இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 19% தீர்வை வரி விதித்துள்ளார்.

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவுடனான புதிய ஒப்பந்தத்தின் கீழ் டிரம்ப் இந்த முடிவை எடுத்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, முன்னர் அறிவித்த 32% தீர்வை வரியை 19% ஆக குறைக்க டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

இந்தோனேசியா – அமெரிக்க வலுசக்தி மற்றும் விவசாய உற்பத்திகளுடன், பில்லியன் கணக்கான டொலர் பெறுமதியான போயிங் ஜெட் விமானங்களையும் கொள்வனவு செய்ய இணக்கம் ஏற்பட்டதை அடுத்து டிரம்ப் இந்த சலுகையை வழங்கியுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )