
சிறிய துப்பாக்கியுடன் ஒருவர் கைது
வெலிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆவாச வீதி பிரதேசத்தில் துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (22) முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஒரு தோட்டா இடும் வகையில் பேனாவின் அமைப்பில் காணப்பட்ட சிறிய துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
கைதான நபர் 25 வயதுடைய கோவிடியாகம பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
CATEGORIES உள்நாட்டுச்