
சட்டவிரோத மதுபானத்துடன் கைதான சந்தேகநபர்
கிரிபத்கொட – மாகொல தெற்கு பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேலியகொடை குற்ற விசாரணை பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (11) பிற்பகல் முன்னெடுத்த சுற்றுவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது கைதான சந்தேகநபரிடமிருந்து 150 மில்லிமீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, அவர் மேலதிக விசாரணைகளுக்காக கிரிபத்கொட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்கேதநபர் 52 வயதுடைய மாகொல தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
மேலதிக விசாரணைகளை கிரிபத்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES உள்நாட்டுச்