ஒழுக்காற்று குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ள தயாசிறி

ஒழுக்காற்று குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ள தயாசிறி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அழைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்பட்டதாக தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே துமிந்த திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )