ஐபிஎல் வரம் பெற்ற 7 இலங்கை வீரர்கள்!

ஐபிஎல் வரம் பெற்ற 7 இலங்கை வீரர்கள்!

இம்முறை இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் 7 இலங்கை வீரர்கள் விளையாட உள்ளனர்.

இந்தியன் பிரீமியர் லீக் வீரர்கள் ஏலத்தில் 06 இலங்கை வீரர்கள் வாங்கப்பட்ட நிலையில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, மத்தீஷ பத்திரனவை தங்கள் அணியில் தக்கவைத்துக் கொள்ள தீர்மானித்துள்ளது.

வனிந்து ஹசரங்க மற்றும் மஹிஷ் தீக்ஷன ஆகியோர் முந்தைய நாள் ராஜஸ்தான் ரோயல்ஸால் வாங்கப்பட்டனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜெட்டா நகரில் நேற்று (25) நடைபெற்ற வீரர்கள் ஏலத்தில் மேலும் நான்கு இலங்கை வீரர்கள் இவ்வருட ஐபிஎல் போட்டிக்கான அணிகளால் வாங்கப்பட்டுள்ளனர்.

நுவான் துஷாரவை பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணியும், கமிந்து மெந்திஸை சன்ரைஸ் ஹைதராபாத் அணியும் வாங்கியுள்ளன.

துஷ்மந்த சமீரவை டெல்லி கெப்பிடல்ஸ் அணியும், புதிய வீரர் எஷான் மலிங்கவை சன்ரைஸ் ஹைதராபாத் அணியும் வாங்கியுள்ளன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )