
John Keells Properties நிறுவனத்தின் ஜா-எல VIMAN மாதிரி தொடர்மாடிக் குடியிருப்புத் திட்டத்தில் அனுபவத்தைப் பெற்ற NDB வங்கி வாடிக்கையாளர்கள்
ஜா-எல VIMAN தொடர்மாடிக் குடியிருப்புத் தொகுதியில் முதலீடு செய்ய எதிர்பார்த்திருக்கும் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் John Keells Properties நிறுவனம் NDB வங்கியுடன் பங்குடமையை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வங்கியின் நெகிழ்ச்சியான அடகுத் தீர்வுகளின் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கனவைப் பூர்த்திசெய்ய முடியும். இதன் ஓர் அங்கமாக ஜா-எல VIMAN மாதிரி தொடர்மாடிக் குடியிருப்புத் திட்டத்தை வங்கியின் முன்னணி வாடிக்கையாளர்கள் நேரில் சென்று பார்வையிடுவதற்கான நிகழ்வொன்றை John Keells Properties நிறுவனம் 2024 ஜுன் 26ஆம் திகதி ஏற்பாடு செய்திருந்தது.
ஜா-எல நகரத்தின் இதயப் பகுதியில் 6 ஏக்கர் நிலப்பரப்பு விஸ்தீரணத்தில், சௌகரியமான நவீன 418 தொடர்மாடி வீடுகளைக் கொண்டிருக்கும் ஜா-எல VIMAN குடியிருப்புத் திட்டமானது, பாதுகாப்பான, நட்பான குடும்ப சூழல், சிறிய நகரக் கட்டமைப்புக்குள் இருந்துகொண்டு கொழும்பு நகருக்கான அணுகல் என கலவையான வசதிகளை வழங்குகிறது. வாடிக்கையாளர்களுடன் நெருக்கமான ஈடுபாட்டை ஏற்படுத்திக் கொண்ட John Keells Properties நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தலுக்கான தலைவரும், John Keells Group இன் பிரதித் தலைவருமான நதீம் ஷம்ஸ் மற்றும் அந்நிறுவனத்தின் விற்பனைக் குழுவினர் ஜா-எல ஏiஅயn திட்டத்தில் முதலீடு செய்வதில் காணப்படும் பல்வேறு நன்மைகள் மற்றும் அதில் முதலீடு செய்யுமாறு வலியுறுத்துவதற்கான காரணம் மற்றும் வாழ்க்கைக்கு சிறந்த இடமாக அடையக் காரணம் போன்ற பல்வேறு விடயங்களுக்கு விளக்கமளித்தனர்.
நதீம் ஷம்ஸ் மேலும் குறிப்பிடுகையில், “ஜா-எல VIMAN திட்டத்தில் முதலீடு செய்ய இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான அடகுத் தீர்வுகளை வழங்கும் நோக்கில் வங்கியுடன் பங்குடமையை ஏற்படுத்தியதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். நவீனத்துவம் மிக்க சௌகரியமான, நீடித்த வாழ்க்கை முறை ஆகிய விடயங்களுக்கு John Keells Properties நிறுவனம் முன்னுரிமை அளித்து, சமூகத்தில் வலுவான உணர்வை ஏற்படுத்துவதால் VIMAN முதலீட்டாளர்களை ஈர்க்கின்றது. வங்கியினால் அடகுத் தீர்வுப் பொதிகள் வழங்கப்படுவதன் காரணமாக தனிப்பயனாக்கப்பட்ட நிதி வாய்ப்புக்களின் மூலம் ஜா-எல VIMAN தொடர்மாடி வீட்டுத் தொகுதியில் வீடுகளை வாங்க நினைப்பவர்களுக்கு இலகுவான அணுகல் கிடைக்கின்றது” என்றார்.
பசுமையான திறந்தவெளிகள், சூரிய சக்தி மற்றும் ஏனைய வசதிகளைக் கொண்டுள்ள ஜா-எல VIMAN சுற்றுச்சூழலையும் நர்ப்புற வசதிகளையும் கலைநயத்துடன் இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. பசுமை மிக்க மத்திய தோட்டப்பகுதி, நீச்சல்தடாகம், உடற்பயிற்சிக் கூடம், வெளிப்புற ஒன்றுகூடல் இடம், தியான கூடம், கிளப்ஹவுஸ், சிறுவர்கள் விளையாட்டு இடம், சைக்கிள் ஓட்டம் மற்றும் நடைபாதைக்கான இடம், பல்வேறு தேவைகளுக்கான உள்ளரங்கம், மின்னியல் வாகனங்களுக்கான மின்னேற்ற வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இதில் அடங்குகின்றன. இந்த விசேட அம்சங்கள் குடியிருப்பாளர்கள் தமக்கிடையிலான தொடர்புகளை ஏற்படுத்துவதற்கும், குடும்பமாக வாழ்வதற்கான சிறந்த சூழலையும் உருவாக்குகின்றது. இந்த விசேட அம்சங்கள் குடியிருப்பாளர்கள் தமக்கிடையிலான தொடர்புகளை ஏற்படுத்துவதற்கும், குடும்பமாக வாழ்வதற்குமான சிறந்த சூழலையும் உருவாக்குகின்றது.
NDB வங்கியின் விற்பனைப் பிரிவின் உதவிப் பிரதித் தலைவர் சமீர சேனாரத்ன கருத்துத் தெரிவிக்கையில், “வீடொன்றின் உரிமையைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தையும், அதற்காகக் காணப்படும் நிதி ரீதியான அர்ப்பணிப்புப் பற்றியும் நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம். John Keells Properties நிறுவனத்துடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள இந்த ஒத்துழைப்பானது வீடு வாங்குபவர்களுக்கு அவர்களின் தனித்துவமான தேவைகளுக்கு ஏற்ப கவர்ச்சிகரமான விலை மற்றும் வீட்டுக் கடன்களுக்கான எளிதான திருப்பிச் செலுத்தும் முறைகள் உட்பட நெகிழ்வான நிதித் தீர்வுகளை வழங்க உதவுகின்றது. குடியிருப்பதற்கான சொத்துக்களை வாங்குவதில் ஆர்வம் உள்ளவர்கள் இது பற்றி சிந்திப்பதற்கு இது சரியான நேரம் என்பதுடன், எமது அடகுத் திட்டங்கள் தங்கள் பயணத்தை நம்பிக்கையுடன் தொடங்குவதற்கு உறுதுணையாகவிருக்கும்” என்றார்.
VIMANதொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற விரும்புபவர்கள் மற்றும் அது பற்றி அறிந்துகொள்ள ஆர்வமாக உள்ளவர்கள் John Keells Properties நிறுவனத்தின் வொக்ஸ்ஹால் வீதி, கொழும்பு 02 என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி தொடர்மாடித் திட்டத்தை பார்வையிட முடியும் என்பதுடன், இது தொடர்பில் காணப்படும் கேள்விகளுக்கு எமது துறைசார் அணியினரிடமிருந்து பதில்களைப் பெற்றுக்கொள்ள முடியும். மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள 0706 062062 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்கவும்.